அக விளையாட்டுகளைப் பற்றிய பல வரலாற்றுச் சான்றுகள் சங்க கால இலக்கியத்தில் காணமுடிகிறது. வீட்டுக்குள்ளோ அல்லது மறைவான இடங்களிலோ விளையாடும் விளையாட்டுகளை அக விளையாட்டுகள் எனக் குறிப்பிடுகிறோம். 'அகம்' என்பதற்கு 'மனம்'(உள்ளம்) என்ற பொருளும் உண்டு. 'அக' என்பதற்கு'மனை' (இல்லம்,வீடு) என்ற பொருள்களும் உண்டு.அக விளையாட்டுகளில் பெரும்பாலும் பெண்களும் மற்றும் குழைந்தைகளும் ஈடுபடுவார்கள். இந்த விளையாட்டுகள் அறிவுத்திறன், வாய்ப்பு நிலை போன்ற இயல்புகளை உள்ளடக்கையதாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment