தோற்றம் மற்றும் வளர்ச்சி :
தட்டாங்கல்லின் தோற்றம் பற்றிக் கூறும்போது இலக்கியத்தில் சுட்டிக்காட்டப்படும் “கழங்காடுதல்” என்ற விளையாட்டு இன்றைய அம்மானையைக் குறிக்கும் இன்றைய அம்மானை என்பது தட்டாங்கல் விளையாட்டைக் குறிப்பதாகும். தட்டாங்கல் தான் நாளடைவில் மெருகடைந்து அம்மானையாக மாறியிருக்கலாம் என்று எடுத்துக்கொள்ளலாம். மேலும் இளம் பெண்கள் கழங்கு விளையாடுவதாகவும், அப்போது ஓன்று முதல் ஏழு வரையில் எண்ணிக்கை வரும்படியான படால்களை பாடுவதாகவும் புலவர்கள் உலா என்னும் பிரபந்தத்தில் அமைத்திருக்கிறார்கள்.
பெயர்க்காரணம் :
இந்த விளையாட்டிற்கு கழற்சிக்காய் (Mollucca Beans) விளையாட்டு என்ற பெயரும் உண்டு என்னென்றால் கழ்ற்சிக்காய்களை கொண்டு ஆடப்பெறுவதால் இப்பெயர் வந்திருக்கலாம். தட்டாங்கல் என்ற பெயர் கற்களை மேலே தூக்கிப்போட்டு அவை கீழே விழுவதற்குள்ளே தரையினை தட்டிபிடிக்கும் முறை பின்பற்ற படுவதால் தட்டாங்கல் என அழைக்கப்பட்டு இருக்கலாம். தற்போதைய தட்டாங்கல் விளையாட்டு மேலே கல்லைப்போட்டு விழுவதற்குள் கீழே உள்ள கற்களை எடுக்க வேண்டும் என்பதாக அமையப்பட்டுள்ளது
விதிமுறைகள் :
கற்களை கீழே வைத்து ஒரு கல்லை மேலே எறிந்து, அது கீழே விழுவதற்குள் கீழே இருக்கின்ற கல்லை ஓன்று, இரண்டு, மூன்று என்ற முறைப்படி எடுக்க வேண்டும் இவ்வாறு பன்னிருமுறை தொடர்ந்து விளையாடினால் பழம் பெற்றவராவார். மீண்டும் முதலிலிருந்தே தொடரவேண்டும் மேலே எறிந்த கல் தவறிவிட்டால், மற்றொருவர் ஆட்டத்தை தொடரலாம். இவ்விளையாட்டில் கற்களுக்கேற்ப ஆட்டமும் விதிமுறைகளும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
வகைகள் :
தட்டாங்கல் விளையாட்டை அறிஞர்கள் மூன்றாங்கல், ஐந்தாங்கல், பத்தான்கல், பலகல் என்று வகைபடுத்தியுள்ளனர். ஆனால் தேவநேய பாவணர் எழாங்கல், பன்னிருகல், பதினாறாங்கல் என்று மேலும் மூன்று வகைகளை கூறியுள்ளார்.
பயன்கள் :
தட்டாங்கல் விளையாட்டின் மூலமாக பிடிக்கும் திறன் மேம்படுகிறது. கையும் , கைநரம்புகளும் வலுப்பெறுகிறது. விரல் நரம்புகள் செயல்படுவதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை இவ்விளையாட்டின் வாயிலாக வளரும் பயனாகும்.
No comments:
Post a Comment