தோற்றம் மற்றும் வளர்ச்சி
பரமபதம் சமயத் தொடர்பான விளையாட்டு என்பதால் தோற்றம் பற்றி விரிவாக்க இயலாது. இருப்பினும் இவ்விளையாட்டின் மூலம் இறை வழிபாடு வலுவடைகிறது.
பெயர்க்காரணம்
பரமன் என்றால் திருமால் என்று பொருள், பரமபதம் என்றால் திருமாலின் பாதம் என்ற பொருளும் உண்டு. இதன் அடிப்படையிலேயே பரமபதம் என்ற பெயர் வந்திருக்க வேண்டும். அதை அடைவதே வாழ்வின் குறிக்கோள்.
விதிமுறை
நூற்றுக்கும் மேற்பட்ட கட்டங்களுடைய வரைப்படத்தின் மீது விளையாடப்படுகிறது.விளையாட்டைத் தொடங்கமுதலில் தாயம் போட வேண்டும். பிறகு வரைப்படக் கட்டங்களில் கீழிலிருந்து மேல் நோக்கி காய்களை நகர்த்த வேண்டும். இடைபட்ட கட்டங்களில் ஏணிகளும், பாம்புகளும் வரையப்பட்டிருக்கும். ஏணியில் ஏரினால் புண்ணியம் செய்ததாகவும், பாம்பின் வாய் வழியாக கீழே இறங்கினால் பாவம் செய்ததாகவும் கருதப்படுகிறது இறுதியில் கடைசி கட்டத்தைச் சென்றடைந்தால் வைகுண்டத்தசென்றடைந்ததாகந நம்பப்படுகடுகிறது . இவ்விளைய்யயாட்டு பெரும்பாலும் மார்கழி மாத்தில் வைகுண்ட ஏகாதசி நாளில் விளையாடப்படுகிறது. ஒவ்வெரு கட்டத்திலும் கடவுள்கள், கடவுளால் படைக்கப்பட்ட தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், பறப்பன, ஊர்வன, போன்ற அனைத்து ஜிவராசிகள் ஆகியவை ஒவ்வொரு கட்டமும் ஒரு த்த்துவ ஆன்மீக கருத்தை கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது இவ்விளையாட்டின் வரைபடங்கள் நவீன காலத்திற்கேற்ப மாற்றமடைந்துள்ளது.
வகைகள்
தசாபதம், அஷ்டாபதம் போன்றவை பரமபதம் வகையைச் சார்ந்தது எனலாம்.
பயன்கள்
இறையியல் த்த்துவங்களை இவ்விளையாட்டு எடுத்துரைக்கிறது.திறனை வளர்க்கிறது. மனிதன் பாவம், புண்ணியம், தர்மம் நேர்மை, நீதி, அன்பு, உண்மை போன்ற நெறிகளை பின்பற்றி வாழ்வதற்கு உதவுகிறது.
No comments:
Post a Comment