கிராமிய பண்பாடுகளை வரலாற்று வரையறைக்கு கொண்டு வரும் கோட்பாடுகள் ஆய்வுகளுக்கு மிகவும் முக்கியமானது எனலாம் .கிராமிய வழக்காறுகளையும், வரலாற்று முறையும் இணைக்கும் காரணிகளாக இக்கோட்பாடுகளை கூறலாம் .நாட்டுப்புறவியலும் வரலாறு தான் என்பதை இக்கோட்பாடுகளின் வாயிலாக அறிய முடிகிறது .மறைந்து வரும் பண்பாட்டை வரலாற்று மீட்டுருவாக்கக் கோட்பாட்டு மூலமும் , பல பண்பாடுகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடும் முறை பண்பாட்டிடை ஒப்பீட்டுக் கோபாட்டின் வாயிலாகவும், பண்பாடுகளை எடுத்துரைப்பது நாட்டார் பண்பாட்டுக் கோட்பாட்டு வழியாகவும் விளக்கமளிப்பது சிறப்பான முறையாக கருதப்படுகிறது
- முனைவர் முகம்மது கதாபி
- முனைவர் முகம்மது கதாபி